×

தமிழ்நாட்டில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள 2 ஆசிரியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள 2 ஆசிரியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். தென்காசி வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை மாலதிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து 2 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 5ஆம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல், ஒவ்வொரு ஆசிரியர் தினத்திற்கும் இந்தியாவில் சிறப்பாக பணிபுரிந்து சேவையாற்றிய 50 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படும்.

இந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்தியா முழுவதில் இருந்தும் 50 ஆசிரியர்கள் இந்த விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார், தென்காசி வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை மாலதி ஆகியோர் தேர்வு செய்யபட்டுள்ளனர். நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள 2 ஆசிரியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்

The post தமிழ்நாட்டில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள 2 ஆசிரியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : CM ,Tamil Nadu ,G.K. ,Stalin ,Chennai ,Chief Minister ,G.K. Stalin ,Government of Alanganallur ,Principal ,B.C. ,
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக...